Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

View View View View View

68ஆவது சுதந்திர தின வைபவம் - 2016.
கௌரவமிக்க இலங்கைத் திருநாட்டின் பெருமைக்குரிய 68ஆவது சுதந்திர தினமான 2016 மாசி 04ம் திகதியன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், சகல மதகுருமாரின் முன்னிலையில் அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசியக்கீதம் இசைக்கப்பட்டதோடு, மாவட்டச் செயலாளரால் சுதந்திர தின விசேட உரையும் மற்றும் இளையோர் தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட மாணவர்களது இணைந்த நிகழ்வுகளுடனும் சகல செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடனும் இனிதே... <மேலும்>

Batticaloa District Secretariat

Vision

Uplifting the living standard of the people in Batticaloa District through excellent public services.

Mission

Enhancing the living condition of the people of Batticaloa District by ensuring the excellent public services through an effective Divisional level Development and administration.

Objectives

Coordinate activities with Divisional Secretariats, assure timely communications between levels of administration, oversee DCB projects, Coordinate election activities and collect revenue in an effective and efficient manner as measured in the District performance indicator.

Key Activities

 1. Distribution and Management of poverty reduction initiatives
 2. Administration of disaster relief and rehabilitation projects
 3. Planning and oversight of development projects.
 4. Coordination of elections
 5. District project administration and direction
 6. Making pension payments
 7. Registration of births, marriages and death
 8. Work connected with lands
 9. Revenue collection
 10. Flood relief Activities
 11. Human resource development
 

சுகதேகிகளான அரசாங்க அலுவலர்களினூடாக வினைத்திறனும், விளைதிறனும் வாய்ந்த அரசாங்க சேவையொன்றை வழங்குவது தொடர்பில் தேகாரோக்கிய உடற்பயிற்சிகள் மற்றும் போசாக்கின் முக்கியத்துவம் தொடர்டாக கடந்த 25.01.2016 முதல் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசாங்க மற்றும் அரசாங்க சேவை - விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் ... <மேலும்>

*** வேலை ஆண்டு ஆரம்பம் - 2016 ...

மட்டக்களப்பு மாவட்டவாழ் மக்களுக்கு புதியதொரு பொருளாதார மற்றும் சமுதாயப் பாதையினைத் திறந்துவிடவும் சிறந்த நாளைய தின நிர்மானிப்பதற்கான தயார்ப்படுத்லை உறுதிப்படுத்துவதற்காக பணியாற்றும் சகல அரச உத்தியோகத்தர்களினதும் மனோநிலையில் நல்மாற்றத்தினை ஏற்படுத்தும் அவசியத்தின் பேரில் மக்களுக்கான அர்ப்பணிப்புமிக்க சேவையின்  முதல் நாளான 2016 ஜனவரி 01ஆம் திகதி(வெள்ளிக்கிழமை) அன்று சகல அரச ஊழியர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்றது. இந்நிகழ்வுகள் மாவட்டச் செயலாளரும், அரச அதிபருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றன.

இதன்போது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரச நிறுவனங்கள் பங்கேற்றிருந்ததோடு, எமது கௌரவத்திற்கும் மதிப்பிற்கும் உரியதான தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் முதலிய நிகழ்வுகளைத் தொடர்ந்து படை வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சகலரையும் நினைவுகூர்வதற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகல பணித்தொகுதியினராலும் தமிழ் மொழியில் அரசாங்க அலுவலர்களுக்கான சத்தியம் / உறுதிமொழியானது எடுக்கப்பட்டது.

மேலும் மாவட்டச் செயலாளரால் மட்டக்களப்பு மாவட்டவாழ் மக்களுக்கு புதியதொரு பொருளாதார மற்றும் சமுதாயப் பாதையினைத் திறப்பதற்கும் அத்தகைய நோக்கத்திற்காக பணியாற்றும் சகல அரச உத்தியோகத்தர்களினதும் மனோநிலையில் நல்மாற்றத்தினை ஏற்படுத்தும் அவசியத்தின் பேரில் சகல பணியாட் தொகுதியினரனதும் பங்களிப்பின் ஊடு நேர்மையாகவும், தாமதங்கள் இன்றி மிகுந்த அர்ப்பணிப்புடனும் மக்களுக்கான சேவைகளை வழங்குதலுக்கான முக்கியத்துவம் தொடர்பில் சிறப்புரை ஆற்றப்பட்டது.

இதற்கு மேலதிகமாக "பெண்கள் மீதான வன்முறைகளற்ற 2016" எனும் நோக்கில் "அன்பின் வழியிலே வாழ்வினைக்கூட்டி வன்முறையற்ற வாழ்வினை ஆக்கி இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழ வேண்டும்" எனும் கருப்பொருளில் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினரோடு இணைந்து சகல உத்தியோகத்தர்களுக்குமாக ஒரு விழிப்புணர்வு நிகழ்வும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு, உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டச் செயலக ஊழியர்களுக்கடையேயான பிரிமியர் லீக் நொக்கவுட் முறையிலான மும்முனை கிறிக்கட் சுற்றுப் போட்டி பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (30.01.2016) அன்று நடைபெற்றது. வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் மற்றும் பரிசுகளையும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள்...  <மேலும்>

அமைதியான, ஒழுக்கமான, முழுமையான, சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் கொடி வார நிகழ்வுகள் கடந்த 19ம் திகதியிலிருந்து 25.01.2016 வரை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின்  தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. <மேலும்>

மாவட்ட உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்ட ஆரம்ப  நிகழ்வு : உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப  நிகழ்வு கரடியனாறில் உள்ள விதை மற்றும் நடுகைப் பொருள் அத்தாட்சிப்படுத்தும் பண்ணையில் 05.10.2015 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது விதை நடுதல், வயல் உழுதுதல், செயற்கைப் பசளை தயாரித்தல் போன்ற செயற்பாடுகளுடன் விவாயிகளுக்கான விழிப்புணர்வுட்டும்... <மேலும்>

'ஓய்வுக்கு முன் ஆயத்தமாதல்' விழிப்புணர்வு செயலமர்வு' முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தினால் இவ்வருடம் அரச சேவையிலிருந்து இளைப்பாறும் வயதினை எட்டிக் கொண்டிருக்கின்ற உத்தியோகத்தர்களுக்கு தமது ஓய்வு காலத்தினை வெற்றிகரமாக பயனுள்ளதாக்குவதற்கான இரண்டு நாள் விழிப்புணர்வுச் செயலமர்வானது கடந்த 23.11.2015-24.11.2015 தினங்களில்... <மேலும்>

சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான காலாண்டு மீளாய்வுக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களிடையே சமாதானத்தினைக் கட்டியெழுப்புதல், வறுமையை இல்லாமல் செய்தல் போன்ற தேவைப்பாடுகளில் முக்கிய இடைவெளியாக உள்ள துறைகளில் திட்டங்களை முன்னெடுக்கத்தக்கதான... <மேலும்>

மாவட்டத்திலுள்ள 1200 பயனாளிகளுக்கு வீடுகளைக் கட்டுவதற்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவியரீதியில் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள 1200 பயனாளிகளுக்கு வீடுகளைக் கட்டுவதற்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வானது... <மேலும்>

வீட்டுக்கு வீடு கிராமத்துக்குக்கிராமம் 15000 கிராமங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் 100 நாள் வேலைத்திட்டத்திட்டத்திற்கு சமாந்தரமாக நடைமுறைப்படுத்தப்படும் "வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் - 15000 கிராமங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம்"...<மேலும்>

கிராமிய மட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விசேட கலந்துரையாடல்.

100 நாள் விசேட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக கிராமிய மட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக அறிவுறுத்தும் விசேட... <மேலும்>

மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கான மாவட்ட ஆலோசனைக்குழுக் கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் (UNDP) EU- SDDP 5 ஆண்டுத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கான... <மேலும்>

அரச காணிகள் தொடர்பாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நடமாடும் சேவை

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, 14 பிரதேச செயலகப் பிரிவிலும் அரச காணிகள் தொடர்பாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக... <மேலும்>

முக்கிய கவனத்திற்கு...

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நெறியாள்கையின்கீழ் மட்டக்களப்பு மாவட்டச்செயலகத்திற்கென, இவ்உத்தியோகபூர்வ வலைப்பக்கம் பிரகடனப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மாவட்டச் செயலகம் மட்டக்களப்பு எனும் பெயரில் அல்லது அதுசார் இயைபுள்ள பிறிதொரு பெயரிலோ அல்லது தகவல்கள் எவ்வகையிலுமோ மாவட்டச்செயலகம் மட்டக்களப்பிற்கான வலைப்பக்கங்களோ அன்றி சமுகவியல் தளங்களில் எவ்வித அங்கத்துவமோ தகவல் பகிர்வுகளுமோ செயலகத்திற்கு இல்லையென்பதோடு, மாவட்டச்செயலகம் மட்டக்களப்பிற்கான தனித்துவமாக உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட இவ்அரசவலைப்பக்கத்தில் பிரசுரிக்கப்படாத எவ்வித தகவல்களுக்கும், கருத்துப்பகிர்வுகளுக்குமான பொறுப்புக்கூறல் மட்டக்களப்பு மாவட்டச்செயலகத்திற்கு இல்லையென்பதை தெரியப்படுத்துகின்றேன்.

மாவட்டச்செயலாளரும், அரச அதிபரும் - மட்டக்களப்பு மாவட்டம்.

** List of Former Government Agent Details.

*** 100 Days Programme ...
..:: * Special News

We have 35 guests online
Visits Counter
Members : 290
Content : 214
Content View Hits : 277406
** Events Gallary ...
The "Dutch Fort"
Circuit Bungalow Booking