எமது நோக்கு

மாவட்ட நிர்வாகம் வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு செயல்திறமிக்கது மற்றும் சேவைகளை வழங்குவதற்கு

எங்கள் நோக்கம்

பிரதேச நிர்வாகத்தை வலுப்படுத்தி, அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்த அனைத்து துறைகளின் நிறுவனம் செய்து, மக்களுக்கு அதிகபட்ச பொதுநல வழங்க முறையான அபிவிருத்தி செயல்பாட்டில் வளங்களை பயன்படுத்த அதிகரிக்க

Batticaloa_Dist_Sec

மட்டக்களப்பு மாவட்டமானது அதன் பெயரை மட்டக்களப்பு நகரம் என்ற பெயரில் இருந்தே பெற்றுக்கொண்டதோடு, ஆரம்பத்திலிருந்தே மட்டக்களப்பு அல்லது புளியந்தீவு என்றே பெயர் பெற்றிருந்தது. மட்டக்களப்பு அல்லது மட்டிக்களப்பு என்பது மடுகளப்பு என்ற பெயரில் இருந்து வருவிக்கப்பட்டதோடு இது சேற்று நிலத்தை குறித்து நிற்கின்றது.

இதன் பரப்பெல்லையானது கிழக்குக்கரையில் 130கி.மீ தெற்கில் உள்ள பெரிய கல்லாறில் இருந்து வடக்கில் உள்ள வெருகல் ஆறு வரை பரந்துள்ளது.

டாக்டர் C.A.கிரிக்கன் பக் சார்ஜைன்ட் மட்டக்களப்பு பற்றி பின்வருமாறு சுவாரசியமாக குறிப்பிடுவது யாதெனில், 'மட்டக்களப்பு தீவானது புளியந்தீவு கடலில் இருந்து 04மைல் தூரத்தில் கடலில் கலக்குமிடத்தில் நடுப்பகுதியில் அமைந்துள்ளதாகவும், இதன்பெயர் தகுதிவுடைமையுடன் இல்லாது அழைக்கப்படுவதாகவும்' கூறப்படுகின்றது.

பிரதான நிலப்பகுதியிலிருந்து தெற்கு, மேற்கு பகுதிகளில் ஒரு சிறிய நீர்ப்பரப்பு இதனை வேறுபடுத்துவதுடன் இது மட்டக்களப்பு தீவு எனவும் மட்டக்களப்பு நகரத்தில் மிகவும் முக்கியமானதும் பெரிய பகுதியுமான(Friesland) சதுப்பு நிலமாக அமைந்துள்ளது. இது வாவியின் சில அடி உயரங்களில் 10மைல் வரை பல வயல் நிலங்களால் சூழப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக முக்கியத்துவம் பெறாத சிறிய தீவுகளில் ஒன்றான போன் தீவின் மீது அக்காலத்தில் உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.போன் என்பவர் ஒரு பங்களாவை கட்டினார்.

பழைய ஒல்லாந்தர் கோட்டைக்கு எதிர்புறமாக வாவியின் அடியில் இருந்து பல விசித்திரமான இசை ஒலிகள் கேட்பதாக நம்பப்படுகின்றது. இந்த ஒலிகள் மிகவும் துல்லியமாக காற்று இல்லாத நேரங்களிலும், நிலாக்காலங்களிலும் கேட்கப்படுகின்றது. 08ம் நூற்றாண்டில் அராபிய வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து முகமதியன் என்ற ஒரு சமூகத்தை உருவாக்கியதாக நம்பப்படுகின்றது.
மட்டக்களப்பு 1622ம் ஆண்டில் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டு ஒல்லாந்தரினால் 1639ம் ஆண்டில் மட்டக்களப்பை கைப்பற்றும் வரை போர்த்துக்கேயர் வசம் இருந்தது.

ஒல்லாந்தர் 1602ம் ஆண்டில் முதலாவதாகவும் 1603இல் இரண்டாவதாகவும் வருகை தந்தனர். ஆட்மிரல் ஸ்பில் என்பவர் 1603ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி மட்டக்களப்பு வாவியினூடாக பிரவேசித்தார்.

1870ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் தலைமைக்காரியாலயமாக மாறியதோடு திருகோணமலையானது இதன் அடிப்படையில் இதன் உதவிக்காரியாலயமாக உருவாக்கப்பட்டது.


R.W.T.மொரிஸ் என்பவரே முதலாவது அரசாங்க அதிபராவார்.

Source : Manograph of the Batticaloa District. 1921: S.O.kanaharetnam, Chief Mudaliyar.

z