தலைப்பு 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம்
=========================================================
# விடயம் 01 : IELTS பயிற்சி நெறி - தெரிவு 01 அல்லது தெரிவு 02

(I) பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கானது

(a) DS/19/IELTS/Staff/01 : தெரிவு 01 : 60 Hours - ( 12 -18 Days ) - கட்டணம் செலுத்தல் மற்றும் நிபந்தனைக்குட்பட்டது
(b) DS/19/IELTS/Staff/02 : தெரிவு 02 : 52 Hours - ( 10 -15 Days ) - கட்டணம் செலுத்தல் மற்றும் நிபந்தனைக்குட்பட்டது

*** மேலதிகமாக 30 மணித்தியாலங்கள் பயிற்சி நெறி அடிப்படை ஆங்கிலப்பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னராகவே IELTS தொடர விரும்புவர்களுக்கு / * In addition to the above a 30-hours online course for each Officers to get more practice for Grammar in English who are willing to follow up IELTS

(II) இரண்டாம் நிலை உத்தியோகத்தர்களுக்கானது - தெரிவு 01 அல்லது தெரிவு 02
(a) DS/19/IELTS/SUB/01 : தெரிவு 01 : 60 Hours - ( 12 -18 Days ) - கட்டணம் செலுத்தல் மற்றும் நிபந்தனைக்குட்பட்டது
(b) DS/19/IELTS/SUB/02 : தெரிவு 02 : 52 Hours - ( 10 -15 Days ) - கட்டணம் செலுத்தல் மற்றும் நிபந்தனைக்குட்பட்டது

*** மேலதிகமாக 30 மணித்தியாலங்கள் பயிற்சி நெறி அடிப்படை ஆங்கிலப்பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னராகவே IELTS தொடர விரும்புவர்களுக்கு / * In addition to the above a 30-hours online course for each Officers to get more practice for Grammar in English who are willing to follow up IELTS

==========================================================================================
# விடயம் 02 : ஆங்கிலத்தில் முழுமையாக இலத்திரனியல் தபால்களை எழுதுதல், பதிலளித்தல் முதலியன...

(III) DS/19/EMAIL/Staff/Eng : பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கானது - eMail இற்கான விசேட பயிற்சிக் கருத்தரங்கு - இரு நாட்கள்

(IV) DS/19/EMAIL/Sub/Eng : இரண்டாம் நிலை உத்தியோகத்தர்களுக்கானது - eMail இற்கான விசேட பயிற்சிக் கருத்தரங்கு - இரு நாட்கள்

==========================================================================
# விடயம் 03 : கணனிப்பயிற்சி நெறி - Online/Offline Email Operation (WEB Mail / Outlook Express / Other Mail Server - G Mail)

(V) DS/19/EMAIL/Staff/ICT : பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கானது - eMail இற்கான செய்முறைப்பயிற்சி - இரு நாட்கள்

(VI) DS/19/EMAIL/Sub/ICT : இரண்டாம் நிலை உத்தியோகத்தர்களுக்கானது - eMail இற்கான செய்முறைப்பயிற்சி - இரு நாட்கள்

==========================================================================

# விடயம் 04 : சிங்கள மொழி (இரண்டாம் மொழி) பயிற்சி நெறி - தெரிவு 01 அல்லது தெரிவு 02

(I) பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கானது

(a) DS/19/SIN/Staff/01 : தெரிவு 01 : 108 Hours - ( Level III )
(b) DS/19/SIN/Staff/02 : தெரிவு 02 : 216 Hours - ( Level II )

(II) இரண்டாம் நிலை உத்தியோகத்தர்களுக்கானது - தெரிவு 01 அல்லது தெரிவு 02
(a) DS/19/SIN/SUB/01 : தெரிவு 01 : 108 Hours - ( Level III )
(b) DS/19/SIN/SUB/02 : தெரிவு 02 : 216 Hours - ( Level II )

==========================================================================

சகல பிரதேச செயலாளர்கட்கும் / திணைக்களத் தலைவர்கட்கும் / கிளைத் தலைவர்கட்கும்,
மாவட்டச் செயலகம் / பிரதேச செயலகம் / திணைக்களம்,
மட்டக்களப்பு மாவட்டம்.


மாவட்ட பயிற்சி நெறிகளில் பங்கேற்பதற்கென அலுவலர்சார் நிகழ்நிலை(Online) விண்ணப்பம் - 2019

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் மற்றும் இணைந்த திணைக்களகங்களின் சேவைத்தரத்தினை தகவல் தொழில்நுட்ப சேவைகளினூடு மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அரச அதிபர் / மாவட்டச் செயலாளரின் ஆலோசணை மற்றும் வழிகாட்டலின்பேரில் பயிற்சிநெறிகள் விசேடத்துவமாக வடிவமைக்கப்பட்டு அலுவலர்களுக்கு கீழ்க்காணும் தொகுதிகளின் அடிப்டையில் விரைவில் வழங்கப்படவுள்ளன.

விண்ணப்பிக்க தொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம் ( சகல உத்தியோகத்தர்களுக்கும் )

விண்ணப்பிக்க தொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது

விண்ணப்பிக்க தொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது

விண்ணப்பிக்க தொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது

விண்ணப்பிக்க தொகுதி 05 : சாரதிகளுக்கானது

விண்ணப்பிக்க தொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி

விண்ணப்பிக்க தொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது

 பயிற்சி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் புதிய பயிற்சிகள் தொடர்பில் அறிவதற்காக - பயனர் கணக்கு அவசியம்பயனர் கணக்கு அவசியம்

இதற்கமைய அலுவலர்களுக்கான சேவையினடிப்படையில் பிரதானமான ஏழு(7) வகுதிகளின் கீழமைந்து பயிற்சிப் பாடத்திட்டங்களை உள்ளீர்த்ததாக இப்பயிற்சி நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பயிற்சியானது உரிய பயிற்சிசார் விடயங்களை மாத்திரமல்லாது ஏலவே அலுவலகங்களில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் விடுபாடுகளை நிவர்த்தி செய்வதினூடு மக்களுக்கான அரச சேவைத்தரத்தின் வினைத்திறனை மேலும் உயர்த்திக் கொள்ளும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே தங்கள் திணைக்களகங்களின் கீழமைந்த உத்தியோகத்தர்களுக்குப் இப்பயிற்சிநெறி தொடர்பாக தெரியப்படுத்துவதோடு, இப்பயிற்சி நெறிக்கான இணைப்பினை தங்களது செயலக விளம்பரப்பலகையிலிடுமாறும் அவசியம் வேண்டுகின்றேன். மேலும், எமது காகிதாதிகளின் செலவீனம் மற்றும் மேலதிக வேலைப்பழுவினைக் குறைக்கும் முகமாக முற்றிலும் Online முறையிலேயே சகல விண்ணப்பங்களும் எதிர்வரும் 25.03.2019க்கு முன்னராக சமர்ப்பிக்கும்படி சகல அலுவலர்களுக்கும் அறியத்தரும்படி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மாவட்டச் செயலகத்தினால் எதிர்வரும் 27.03.2019 சகல திணைக்களசார் விண்ணப்பங்களின் யாவும் தொகுக்கப்பட்டு உரிய சாராம்ச அறிக்கை அத்திணைக்கள தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மீளசமர்ப்பிக்கப்படும். திணைக்களத்திலிருந்து மீளக்கிடைக்கப்பெறும் மாற்றீடுகள் மற்றும் விதப்புரைகள் உரிய தரவுத்தளத்தில் இற்றைப்படுத்தப்படும். பின்னராக இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளத்தக்கவாறாக அவ்வுத்தியோகத்தர்கள் தமது திணைக்களத்தினூடாக மாவட்டச் செயலக பயிற்சிகளுக்காக அழைக்கப்படுவர்.

தங்கள் சேவையின் கீழமைந்த உத்தியோகத்தர்கள் உரிய வினைத்திறன் மட்டத்தை ஈட்டிக்கொள்வதற்கு தாங்கள் எடுக்கும் மேலான முயற்சியை நான் பெரிதும் கௌரவத்துடன் மதிக்கின்றேன்.

பயிற்சிக்காலம் மற்றும் விபரங்கள் உரிய பயிற்சியின் போது தங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். இது தொடர்பிலான ஏதேனும் தகவல்கள் தங்களுக்கு தேவைப்படின் எமது அலுவலரை தயவுடன் அணுகவும். (0773729748 / 065-2226427 – இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)


ஒப்பம்.
S.ஸ்ரீகாந்த்,
மேலதிக அரசாங்க அதிபர்,
மாவட்டச் செயலாளருக்காக,
மட்டக்களப்பு மாவட்டம்.

உட்பிரிவுகள்