[Last Updated On : 21.Apr.2015] [Download Mannual (Source from : http://www.president.gov.lk/)]

100 Days Program - நூறு நாள் வேலைத்திட்டம் [Some of Event Highlights/சில நிகழ்வுகளின் தொகுப்பு]

கிராண் விஸ்ணு கோயில் குறுக்கு வீதி புனரமைப்பிற்கான அடிக்கலிடும் நிகழ்வு

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் "வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம்" எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராண் விஸ்ணு கோயில் குறுக்கு வீதி புனரமைப்பிற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை 18.04.2015 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

******************************

மாவட்டத்திலுள்ள 1200 பயனாளிகளுக்கு வீடுகளைக் கட்டுவதற்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவியரீதியில் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள 1200 பயனாளிகளுக்கு வீடுகளைக் கட்டுவதற்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(03.04.2015)அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

******************************

கிராமிய மட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விசேட கலந்துரையாடல்.

100 நாள் விசேட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக கிராமிய மட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (13.03.2015) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

******************************

மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள வீடமைப்புச் செயற்பாடுகள் குறித்த கூட்டம்.

அரசாங்கத்தின் நூறு(100) நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள வீடமைப்புச் செயற்பாடுகள் குறித்த கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில்  கடந்த செவ்வாய்க்கிழமை 27.12.2014 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திரு.கே.ஜெகநாதன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

******************************

இலவச வை பை(WiFi-Wireless Fidelity) தொழில்நுட்பத்துடன் சுற்றாடல் தகவல் நிலையத்திறப்பு விழா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கலையோர வளங்கள், சுற்றாடல் தொடர்பான ஆய்வுகளுக்கான உதவிகளை வழங்கும் வகையில் இலவச வை பை(WiFi-Wireless Fidelity) தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள சுற்றாடல் தகவல் நிலையத்திறப்பு விழாவும், மாவட்ட சுற்றாடல் சட்டதிட்ட அமுலாக்கல் குழுக் கூட்டமும் கடந்த செவ்வாய்க்கிழமை(07.04.2015)மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களப் பணிப்பாளர் திரு.எஸ்.கோகுலதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுகளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ். எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேற்படி சுற்றாடல் தகவல் நிலையத்தினை திறந்து வைத்தார்.

******************************

வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் - 15000 கிராமங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் 100 நாள் வேலைத்திட்டத்திட்டத்திற்கு சமாந்தரமாக நடைமுறைப்படுத்தப்படும் "வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் - 15000 கிராமங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம்" தொடர்பான கலந்துரையாடல் கடந்த 02.04.2015 வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

******************************

ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை(10.03.2015) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைகழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், காணி அமைச்சர் திரு.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன அவர்கள் பிரதம அததியாக கலந்து கொண்டு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

******************************

கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் மாவட்ட நிகழ்வு.

அரசின் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் திட்டத்தின் மாவட்ட நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை (16.04.2015) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.எஸ்.எச்.முஸ்ஸமில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.கிரிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

******************************

பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் பணிகளுக்கான ஊக்குவிப்புத்திட்டம்.

100 நாள் வேலைத்திட்டத்திற்கமைய சகல மாவட்டங்களிலும் பால் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் பணிகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பால் பண்ணையாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடனும், வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபன வங்கியின் பங்களிப்புடனும் ஊக்குவிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

******************************

இளைஞர் விவசாயப் பண்ணையாளர்களுக்கு உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு.

விவசாய அமைச்சினால், இளைஞர் விவசாயப் பண்ணைத்திட்டத்தின் கீழ் குறித்த செயற்பாட்டு வலுவூட்டலுக்காக வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இளைஞர் விவசாயப் பண்ணையாளர்களுக்கு இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும் கிருமிநாசினி தெளிகருவியும் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (16.02.2015) மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச்செயலாளருமான திருமதி.பி. எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இளைஞர்களது பண்ணைகளை மேம்படுத்துவதும், அவர்களது வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக ஏனைய இளைஞர்களுக்கு முன்மாதிரிதியானவர்களாக மாற்றி இளைஞர்களை பிரதேசத்தின் பிரதான உற்பத்தித்துறையான விவசாயத்துறையில் ஈடுபடச் செய்வதும், ஊக்கப்படுத்துவதும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

******************************

 

More Development Project Details in Batticaloa District - மேலும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள்