WhatsApp Image 2023 11 06 at 17.01.52 1

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 வகுப்புடைய அலுவலகர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டலில் இருந்து விடுவிப்பதற்கான பாடநெறிப் பயிற்சி செயலமர்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை  மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் 06.11.2023 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 10 நாட்கள் இடம்பெறவுள்ள குறித்த பயிற்சி செயலமர்வானது தொடர்ச்சியாக 10 நாட்கள் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் மற்றும் மண்முனைப்பற்று  பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2023 11 06 at 17.02.16 WhatsApp Image 2023 11 06 at 17.02.13 WhatsApp Image 2023 11 06 at 17.02.15 WhatsApp Image 2023 11 06 at 17.01.52