
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நவம்பர் 14ஆம் திகதிய உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.11.2023 அன்று இடம் பெற்றது.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் மாவட்ட செயலகமும் இணைந்து இத்தொற்றா நோய்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியதுடன், செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமையும் ஏற்பாடு செய்திருந்தனர். தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வைத்தியர்களினால் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி பிரசாந்தி லதாகரன், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திருநவன், புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தீபக்குமாரன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







