WhatsApp Image 2024 01 16 at 16.07.07

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே முரளிதரன் அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். பண்ணையாளர்களின் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கையினை  முன்வைத்துள்ளனர்.

மயிலத்தமடு, பெரிய மாதவணை கால்நடை கமநல அமைப்பின் தலைவர் நிமலன் தலைமையில் வருகை தந்த குழுவினரினால் குறித்த மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்  பொலிஸ் உயர் அதிகாரிகள், மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

WhatsApp Image 2024 01 16 at 16.07.08 WhatsApp Image 2024 01 16 at 16.07.07