WhatsApp Image 2024 01 19 at 16.13.52

மண்முனை தென்மேற்கு  பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் அவர்களினால் நிவாரணப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பட்டிப்பளை பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. பட்டிப்பளையின் 10 கிராம சேவையர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 96 குடும்பத்தினருக்கு பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா, உப தலைவர் ரி.பத்மராஜா,உதவி பிரதேச செயலாளர் திருமதி மேனகா புவிக்குமார்,  பட்டிப்பளை பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகரன், கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 01 19 at 16.13.52 WhatsApp Image 2024 01 19 at 16.13.52 1 WhatsApp Image 2024 01 19 at 16.13.50 WhatsApp Image 2024 01 19 at 16.13.51

WhatsApp Image 2024 01 19 at 16.13.53 1 WhatsApp Image 2024 01 19 at 16.13.49 WhatsApp Image 2024 01 19 at 16.13.53 WhatsApp Image 2024 01 19 at 16.13.48