WhatsApp Image 2024 01 20 at 20.59.18 1

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா 2001.2024 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. அரச உத்தியோத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 19 நாள்  இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் அவர்கள் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர். அதிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது 150 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால்  கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்தது. நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி  மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களில் கடமையாற்றும் 65 அரச உத்தியோகத்தர்கள் இக்கற்கைநெறியினை  பூர்த்தி செய்திருந்தனர்.

இந்த நிகழ்விற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாக கிராம சேவை உத்தியோகத்தர், மாவட்ட செயலகத்தின் இரண்டாம் மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார், பயிற்சி நெறியின் வளவாளர்களான மாணிக்கவாசகம், செல்வி.எம்.கே.திலினி மதுசிகா, திருமதி.சுதேசி தில்ருக்சி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக  கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 01 20 at 20.59.18 1 WhatsApp Image 2024 01 20 at 20.59.18 WhatsApp Image 2024 01 20 at 20.59.16 WhatsApp Image 2024 01 20 at 20.59.27

WhatsApp Image 2024 01 20 at 20.59.23 WhatsApp Image 2024 01 20 at 20.59.19 WhatsApp Image 2024 01 20 at 20.59.22