WhatsApp Image 2024 01 21 at 18.37.56

மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் தலைவி சல்மா ஹம்சா தலைமையில் நடைபெற்ற நிகழ்வு காப்பகத்தின் பிரதான மண்டபத்தில் 21.01.2024 அன்று நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் நழிமி, காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன், காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் பணிப்பாளர் எம்.ஐ.அஜ்வத் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பக மாணவிகளின் நிகழ்வுகள் இதன் போது நிகழ்வை அலங்கரித்ததுடன், காப்பகத்தில் உள்ள பெண்களுக்கான காப்பக அடையாள அட்டையும் அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 01 21 at 18.37.59 1 WhatsApp Image 2024 01 21 at 18.37.59 WhatsApp Image 2024 01 21 at 18.37.56 WhatsApp Image 2024 01 21 at 18.37.58 1