
ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட விபுலானந்தா பொது நூலகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்கள் பெறுமதியான நூல்களை வழங்கி வைத்தார். சித்தாண்டியில் அமைந்துள்ள விபுலானந்தா பொது நூலகத்திற்கு தேசிய மொழிகள் பிரிவின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் ஒரு இலட்சம் பெறுமதியான நூல்கள் மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் மாணவர்களிடையே கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதுடன் இரண்டாம் மொழி அறிவினை விருத்தி செய்வதற்காக இந்நூல்கள் ஏறாவூர் பற்று பிரதேச சபை செயளாலர் வ.பற்குணன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வி.சந்திரகுமார், பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.எம். றிழா, சித்தாண்டி பொது நூலக உதவியாளர் ஜே.சுகந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.






