WhatsApp Image 2024 02 13 at 18.12.56

திருச்செந்துர் ஓம்காரநாதா முன்பள்ளி  சிறார்களுக்கான கெளரவிப்பு வைபவம் எஸ்.வரதநிரோசன் தலைமையில்  ஈழத்து திருச்செந்துர் முருகன் ஆலய வளாகத்தில் 13.02.2024 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில்  ஆன்மீக அதிதியாக ஈழத்து திருச்செந்துர் முருகன் ஆலய பிரதம குரு சபரீச சைத்தன்னியர் கலந்து  கொண்டதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் தலைமை அதிதியாக ஓய்வு நிலை பிரதம கணக்காளர் ஏ.ரவிந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் அதிதிகளுக்கு மலர் செண்டுகள் வழங்கி வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் போது சிறார்களினால் பேண்ட் வாத்தியம் இசைத்தல்,பேச்சு போன்ற அரங்க நிகழ்ச்சிகள் மூலம் தமது ஆற்றல் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.அதிதிகளினால் சிறார்களுக்கு  பதக்கங்கள் அணிவித்து  சான்றிதழ்களும்  பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் போது ஏற்பாட்டு குழுவினரினால் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். சுவாமி ஓம்காரநாதா முன்பள்ளியில் சிறந்த நல்ஒழுக்க விழுமியங்களுடன்  கற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை  சிறப்பம்சமாகும்.

WhatsApp Image 2024 02 13 at 18.12.53 WhatsApp Image 2024 02 13 at 18.12.54 1 WhatsApp Image 2024 02 13 at 18.12.57 1 WhatsApp Image 2024 02 13 at 18.12.56 1

WhatsApp Image 2024 02 13 at 18.12.56 WhatsApp Image 2024 02 13 at 18.12.57 WhatsApp Image 2024 02 13 at 18.12.55