WhatsApp Image 2024 02 15 at 12.25.37

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு மாவட்ட  கிராம அபிவிருத்தி திணைக்களத்தின்  சிரேஷ்ட தையல் போதனாசிரியர்களால் 15.02.2024 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவம் வழங்கப்பட்டது. இதன்போது கடந்த காலங்களில்  அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளை  சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து பொன்னாடை போர்த்தி,  நினைவுச் சின்னம் வழங்கி தையல் போதனாசிரியர்களால் அரசாங்க அதிபருக்கு இக் கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது கிராம அபிவிருத்தி தினைக்களத்தின்  மட்டக்களப்பு மாவட்ட அலுவல கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நிவேதிதா ரவிச்சந்திரன், காத்தான்குடி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் சிரேஷ்ட தையல் போதனாசிரியை பரினா பாலிக்,  செங்கலடி  நிலையத்தின் தையல் போதனாசிரியை காந்திமதி கணேசமூர்த்தி, மண்முனை வடக்கு நியைத்தின் தையல் போதனாசிரியை திருவிளங்கம் விஜயகலா மற்றும்  பட்டிப்பளை பயிற்சி நிலையத்தின் போதனா  ஆசிரியை அருளம்பலம் அமிர்தவல்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும் இதன்போது இம்மாவட்டத்தில் தையல் தொழில் பயிற்சி வழங்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 02 15 at 12.25.37 WhatsApp Image 2024 02 15 at 12.25.38 WhatsApp Image 2024 02 15 at 12.25.38 1