WhatsApp Image 2024 02 26 at 12.33.30 1

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுமட்டக்களப்பில் 26.02.2024 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்,  மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.ச.கோணேஸ்வரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் (மாகாணம்) எஸ்.அருள்மொழி, சிரேஸ்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், ஹமிட் அமைப்பின் பணிப்பாளர், னுயவய நிறுவனத்தின் பணிப்பாளர், மாற்று திறனாளிகள் அமைப்பின் ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

பிரதம அதிதியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கும் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் விசேட தேவையுடைய மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்தது. நிகழ்வில் பிரதம அதிதி உள்ளிட்ட  விசேட அதிதிகளின் உரைகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு இதன் போது அதிதிகளினால் ஊக்குவிப்பு தொகை வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 02 26 at 12.33.30 1 WhatsApp Image 2024 02 26 at 12.33.30 WhatsApp Image 2024 02 26 at 12.33.30 2 WhatsApp Image 2024 02 26 at 12.33.31

WhatsApp Image 2024 02 26 at 12.33.31 1 WhatsApp Image 2024 02 26 at 12.33.32