WhatsApp Image 2024 03 23 at 05.03.33

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் 22.03.2024 அன்று விசேட இப்தார் நோன்புதிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில்  இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், இவ் இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் இஸ்புல்லா,நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முஹம்மட் முஹம்மட் ஹரீஸ், மௌலானா,முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம்,ஜம்மியத் துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு குரான் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இப்தார் மாதத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் காஸா குழந்தைகள் நிதியத்திற்கு 5 இலட்சம் ரூபாய் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 23 at 05.03.31 WhatsApp Image 2024 03 23 at 05.03.32 WhatsApp Image 2024 03 23 at 05.03.33 WhatsApp Image 2024 03 23 at 05.03.33 1

WhatsApp Image 2024 03 23 at 05.03.35 WhatsApp Image 2024 03 23 at 05.03.35 1 WhatsApp Image 2024 03 23 at 05.03.34 1 WhatsApp Image 2024 03 23 at 05.03.34

WhatsApp Image 2024 03 23 at 05.03.32 1 WhatsApp Image 2024 03 23 at 05.03.32 2 WhatsApp Image 2024 03 23 at 05.03.35 2