WhatsApp Image 2024 03 27 at 5.13.48 PM

இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் (Child Fund) அனுசரனையுடன் Action Unity Lanka தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள காலநிலை மாற்றத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய சமூகத்தினை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 27.03.2024 அன்று கல்லடி தனியார் விடுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் (Child Fund) அனுசரனையுடன் இடம்பெறவுள்ள இத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக  சிறுவர் நிதியத்தின் (Child Fund) இலங்கைக்கான பணிப்பாளர் ஆதிதி கொஷ், இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் வியாபார அபிவிருத்திக்கான பணிப்பாளர் தினன்த தம்பேபிற்ற, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.சித்திரவேல், புனானை 23 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமறட்ண, தொப்பிக்கலை 232 வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் பிறசாத் ரந்துனு, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன், முல்லைத்தீவு மாவட்ட முன்னால் மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் மற்றும் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் அதீதி கொஷ் ஆகியோர் இணைந்து திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைத்தனர். இந் நிகழ்வில் Action Unity Lanka தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உயரதிகாரிகள், இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். சிறுவர் நிதியத்தின் (Child Fund) அனுசரனையுடன் Action Unity Lanka தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் கிரான் பிரதேச செயலக பிரிவில்  முன்னெடுக்கப்படவுள்ள காலநிலை மாற்றத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய சமூகத்தினை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்கள் பலவற்றில் உள்ள பொருளாதார ரீதியாக வலுவிழந்துள்ள பல குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், பொதுவான பல வேலைத்திட்டங்களும் இத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 27 at 5.13.48 PM WhatsApp Image 2024 03 27 at 5.13.41 PM WhatsApp Image 2024 03 27 at 5.13.26 PM WhatsApp Image 2024 03 27 at 5.13.23 PM

WhatsApp Image 2024 03 27 at 5.13.02 PM WhatsApp Image 2024 03 27 at 5.13.07 PM WhatsApp Image 2024 03 27 at 5.13.36 PM