WhatsApp Image 2024 03 28 at 12.26.57 PM

தேவைநாடும் மகளிர் அமைப்பினரினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு தேவை நாடும் மகளிர் அமைப்பின் நிலைய முகாமையாளர் டி. சங்கீதா தலைமையில் வை எம் சி ஏ மண்டபத்தில் 28.03.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜெ முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிறுவனத்தினால் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்களை அரவணைத்து அவர்களுக்கு பாதுகாப்பு  இல்லத்தின் முலம் பாதுகாப்பு வழங்கிவருவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான செயற்திட்டங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கான தொடர் கண்காணிப்பு மற்றும்  வன்முறைக்கு எதிரான வெற்றி செயற்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.தேவை நாடும் மகளிர் அமைப்பினால் எதிர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக முன்மொழிவு குழு கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், உளநல வைத்திய நிபுணர் டான் சௌந்திரராஜா, சட்டத்தரணி யோகேஸ்வரன், சட்டத்தரணி சஜிந்தா, உயர் அதிகாரிகள், பொலிசார், தேவைநாடும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 03 28 at 12.26.57 PM WhatsApp Image 2024 03 28 at 12.26.49 PM WhatsApp Image 2024 03 28 at 12.26.55 PM