WhatsApp Image 2024 04 04 at 12.56.26 PM 1

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முதலாம் ஆண்டுக்கான கணக்காய்வு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி காயத்திரி ரமேஸ் அவர்களின்  ஏற்பாட்டில் மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.04.2024 அன்று  இடம்பெற்றது.

 

இதன் போது மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐயவினாக்கள், ஒதுக்கிடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மேலும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விடயங்கள்  தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் அறவிட முடியாதுள்ள வரவுகளை மிக விரைவில் வசுலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்ததுடன் உரிய காலப்பகுதியினுள் கணக்காய்வுகளை நிறைவு செய்யவேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி  சுதர்ஷினி ஶ்ரீகாந்த், சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. ஆனந்த, மாவட்ட பிரதம கணக்காளர் எம். எஸ். பஸிர், பிரதேச செயலாளர்கள், கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹிர், கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் சுனில் பி. ஜயசேகர, கணக்காளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 04 04 at 12.56.26 PM 1 WhatsApp Image 2024 04 04 at 12.56.25 PM WhatsApp Image 2024 04 04 at 12.56.26 PM WhatsApp Image 2024 04 04 at 12.56.24 PM