
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.05.2024 அன்று இடம்பெற்றது. அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணிசிங்கள மொழியை கற்று தேர்ச்சி பெற்று சிறந்த தொடர்பாடலை மேற்கொண்டு சேவையை வழங்க வேண்டும் என்றார்.
உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக்கற்கை நெறி அமையவுள்ளது.150 மணித்தியாலங்களை உள்ளடக்கிய இக்கற்கை நெறியில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆர்வமாக கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இக்கற்கை நெறியினை அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளரான கே.மதிசூதனன் மேற்கொண்டார். இந்த நிகழ்விற்கு மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன், அரச கரும மொழிகள் திணைக்கள இரண்டாம்மொழி கற்கையின் இணைப்பாளர் என்.விஜயதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.







