WhatsApp Image 2024 05 11 at 14.14.16

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் மற்றும் நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

07 பில்லியன் ரூபா செலவில் மேலும் பல வீதி அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக கௌரவ இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பில்லியன் ரூபா செலவில் வீதி அமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 07 பில்லியன் ரூபா செலவிலான வீதி அபிவிருத்திப்பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.இதன்போது காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 23 வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 1053 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் குளங்கள், கால்வாய்கள் உட்பட விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான நீர் வழங்கல் பகுதிகளை விரிவுபடுத்தி அதன் ஊடாக விவசாய செய்கையினை அதிகரிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கும் வகையில் இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவில் நிறைவுசெய்து மக்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் இதன்போது இராஜாங்க அமைச்சரினால் தீர்த்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 05 11 at 14.14.16 WhatsApp Image 2024 05 11 at 14.14.17 WhatsApp Image 2024 05 11 at 14.14.18 WhatsApp Image 2024 05 11 at 14.14.19