
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் சிவ நாகதம்பிரான் மணல்வீதியை கிறவல் வீதியாக மாற்றுவதற்கான அங்குரார்ப்பன நிகழ்வு 20.05.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அத்தியாவசிய மணல் வீதிகளை கிறவல் வீதியாக மாற்றும் திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருவேப்பங்கேணி பிரதேசத்தில் குறித்த வீதி கிறவல் வீதி மாற்றியமைக்கப்படவுள்ளது. 4 மில்லியன் நிதி ஒதுக்கிட்டின் கீழ் 250 மீற்றர் நிலமும் 4 மீற்றர் அகலமுமான சிவ நாகதம்பிரான் மணல் வீதியே கிறவல் வீதியாக மாற்றப்படவுள்ளது. இவ் வீதியினால் பாடசாலை மாணவர்கள் பிரதேச மக்கள் என பலர் நன்மை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கணேசமூர்த்தி, மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன் உள்ளிட்ட பலர் இதன் போது கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.






