
மட்டக்களப்பில் இடம்பெறும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.05.2024 அன்று இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் மணல் வீதியை கிறவல் வீதியாக மாற்றும் செயற்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மக்கள் அதிகம் உபயோகிக்கும் மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றுவதற்கான ஆலோசனை இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்டது.
இதன்போது பிரதேச ரீதியாக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களிடையே வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான ஆலோசனைகள் இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்டது. எதிர்வரும் யூன் மாதத்தின் இறுதியில் அனைத்து வேலைத் திட்டங்களையும் முடிவுறுத்துமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் மாவட்ட செயல பிரதம கணக்காளர் எஸ்.எம்.பசிர், மாவட்ட பொறியியலாளர் ரீ.சுமன் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.






