
மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டத்தொகுதியில் நிர்வாக பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்கள் 10.06.2024 அன்று ஆரம்பித்து வைத்தார். கோட்டையில் இயங்கிய மாவட்ட செயலகத்தின் இடவசதி பற்றாக்குறையினால் 2016 ஆம் ஆண்டு புதிய மாவட்ட செயலகத்திற்கான கல் வைக்கப்பட்டு இக்கட்டத்தொகுதியின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றது.
புதிய கட்டடத்தொகுதியில் பாதியளவு நிர்வாக விடயங்களும் மிகுதி நிர்வாக சேவை கோட்டையில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இப் புதிய கட்டடத் தொகுதியின் திறப்பு விழா மிக விரைவில் இடம்பெறும் என அரசாங்க அதிபர் இதன்போது கருத்து தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களா திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் , மாவட்ட செயலக உயர் உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







