WhatsApp Image 2024 06 12 at 14.39.40

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் தையல் இயந்திரங்கள் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் 12.06.2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக எஸ்கோ நிறுவன பணிப்பாளர் ஸ்பிரித்தியோன் இப்புதிய தையல் இயந்திரங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எஸ்கோ நிறுவனமானது கடந்த காலங்களில்  மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தல், பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்தல், பின்தங்கிய  பிரதேசங்களில் உள்ள  முன்பள்ளி சிறார்களுக்கான கல்வி வழங்கல்,மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டுதல் போன்ற செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் எஸ்கோ நிறுவன உதவி பணிப்பாளர் கோதைநாயகி,  திட்ட இணைப்பாளர் எஸ். உதயேந்திரன் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 06 12 at 14.39.38 WhatsApp Image 2024 06 12 at 14.39.39 WhatsApp Image 2024 06 12 at 14.39.40