×

Message

Invalid Page Request

WhatsApp Image 2024 06 23 at 14.07.05

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 23.06.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அல் அக்சா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு விஜயம் செய்தார். இதன் போது அங்கு பலஸ்தீன் காசா மக்களுக்காக நடைபெற்ற  பிரார்த்தனையிலும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

காத்தான்குடி அல் அக்சா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு விஜயம் செய்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம் .எல் .ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்இ பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ எல்.எம் அதாவல்லாஹ்இ அலி  சாஹீர் மௌலானா  ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கா உட்பட பிரமுகர்கள்இ உலமாக்கள்இ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஜனாதிபதிக்கு பள்ளிவாயல் நிர்வாகத்தினால் அதன் தலைவர் பரீட்  பொன்னாடை போர்த்தி கௌரவித்துடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி மக்களிடம் காசாவில் உள்ள  சிறுவர்களுக்காக   சேகரிக்கப்பட்ட . 10இ769இ417 ரூபாவுக்கான   காசோலையும் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் விசேட  பிரார்த்தனையை மௌலவி ஏ.ஜி.எம் அமீன் பலாஹி நிகழ்த்தினார்.

WhatsApp Image 2024 06 23 at 14.07.07 1 WhatsApp Image 2024 06 23 at 14.07.07 WhatsApp Image 2024 06 23 at 14.07.05 WhatsApp Image 2024 06 23 at 14.07.06

WhatsApp Image 2024 06 23 at 14.07.05 2 WhatsApp Image 2024 06 23 at 14.07.05 1 WhatsApp Image 2024 06 23 at 14.07.06 1