WhatsApp Image 2024 06 29 at 12.39.16

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார அவர்களின் தலைமையில் "வெல்வோம் ஶ்ரீ லங்கா" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் யூர்த் நிகழ்வு  29.06.2024 அன்று இந்துக்கல்லூரி மைதானத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் அவர்கள் கலந்துசிறப்பித்தார்.

இளைஞர் யுவதிகளின் வேலை வாய்புக்காக தயார்படுத்தும் முகமாக சிறந்த தொழில் இலக்கை அமைத்துக் கொள்ளுதல், தொழில் இலக்கை அடைவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் அதற்காக  இலங்கையிலும் மற்றும் வெளிநாட்டில் உள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தி ஸ்மாட் யூத்தாக வாழ்க்கையில் உயர்வதை நோக்காக கொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றது.இளைஞர்கள் தமது கனவு வாழ்க்கையை நிஜமாக்கும் வகையில் தமது திறன்களை இனங்கண்டு முறைசார் மற்றும் முறைசாரா  உலகதரம் வாய்ந்த தொழிலாளர்களாக புதிய தொழிநுட்ப விருத்திக்கு ஏற்றவாறு தமது ஆற்றலை வளர்த்து வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் அமைச்சரினால் இளைஞர் யுவதிகளுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டது.

சிறுமாற்றத்தில் பாரிய  எழுச்சியை ஏற்படுத்த முடியும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என இளைஞர்களுக்கு கருத்து தெரிவித்ததுடன் எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றார். இந்நிகழ்வில்  அமைச்சின் செயலாளர்கள், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.ஜீ.எச்.என்.ஆர் கிரியெல்ல, மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் சுமித், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 06 29 at 12.39.15WhatsApp Image 2024 06 29 at 12.39.14 1WhatsApp Image 2024 06 29 at 12.39.15 1WhatsApp Image 2024 06 29 at 12.39.16

WhatsApp Image 2024 06 29 at 12.39.17WhatsApp Image 2024 06 29 at 12.39.18WhatsApp Image 2024 06 29 at 12.39.18 1WhatsApp Image 2024 06 29 at 12.39.19

WhatsApp Image 2024 06 29 at 12.39.19 1WhatsApp Image 2024 06 29 at 12.39.20WhatsApp Image 2024 06 29 at 12.44.31WhatsApp Image 2024 06 29 at 12.44.32