
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உதித்த காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் "உறுமய " தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் குடியிருக்கும் மக்களுக்கு உறுதி வழங்குவதற்கான முன்னாயத்த நடமாடும் சேவையானது வர்த்தக, சுற்றாடல் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் அவர்களின் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் 04.07.32024 அன்று வழங்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கான சட்டபூர்வமான உரித்து காணியற்ற மக்களுக்கு மிக விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். ஒரு சிறிய தொகைப்பணத்தை செலுத்தி நிலம் ஒன்றினை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இதன் போது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவித்தார்.இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மஸ்ரீ லியனகே, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹால், காணி சீர்திருத்த ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







