
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை 09.07.2024 அன்று ஆரம்பித்துவைத்தார். "எமது காலம்" எனும் தொனிப்பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக தேவநாயகம் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை ரீதியில் பயணிக்கும் அருங்காட்சியகத்தை காட்சிப்படுத்தும் 4வது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புராதன நாகரிகம் மற்றும் அவர்களின் தொழில்நுட்பங்களை இலகுவான முறையில் அறிந்து கொள்வதற்கும் ஆதி வரலாற்றை புரிந்து கொள்வதற்கான ஒரு களமாக இக்கண்காட்சியகம் அமைந்ததுள்ளதுடன் சமாதானம், சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தொடர்ச்சியா எழு நாட்கள் இக்காட்சியகத்தினை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் அருங்காட்சியகத்தினை அதிகளவான பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்வில் 243 வது இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, ஸ்கோப் நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் சுஜன் நாணயக்கார, Search for Common Ground நிறுவன தேசிய பணிப்பாளர் நவாஸ் மொஹமட், கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ், தொழில்நுட்ப தலைமை உதவியாளர் மொஹமட் மாஹிர், வலய கல்வி பணிப்பாளர்கள், உயர்அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






