WhatsApp Image 2024 07 16 at 16.24.19

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற, திறமையுடைய 100,000 மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தர மாணவர்கள் 6,000 பேருக்கும் புலமைப்பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக நடைபெறும் மட்டக்களப்பு மாவட்ட புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் 16.07.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள், ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவர்களான இராஜாங்க அமைச்சர்கள் எஸ்.வியாழேந்திரன் அவர்கள், எம்.எல்.எம்.அதாவுல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா  உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கல்வியதிகாரிகள் மற்றும் மாணவர்கள், மாணவர்களது பெற்றோர் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் 1471  மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தர மாணவர்கள் 300 பேருக்கும்  அதிதிகளினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 07 16 at 16.24.19 WhatsApp Image 2024 07 16 at 16.24.20 WhatsApp Image 2024 07 16 at 16.24.21 WhatsApp Image 2024 07 16 at 16.24.18

WhatsApp Image 2024 07 16 at 16.24.18 1 WhatsApp Image 2024 07 16 at 16.24.16