
மட்டக்களப்பில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் 2024 நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.முரளிதரன் ஒழுங்கமைப்பில் மாவட்ட செயலகத்தில் 17.07.2024 அன்று இடம்பெற்றது.
மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினுடாக முன்பள்ளி அபிவிருத்தி தேசிய செயலகமானது அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் நாடளாவிய ரீதியில் இந்நிகழ்வை நடாத்துகின்றது. "மலரும் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் ஜூலை மாதம் 14 திகதி முதல் 20 திகதி வரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் சிறார்களின் கண்கவர் நடனங்கள் பல இடம் பெற்றதுடன் அவர்களின் பேச்சுக்கள் அரங்கேற்றப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த், திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), வைத்தியர் ஶ்ரீநாத், திணைக்கள தலைவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.









