
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாத்தன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் 18.07.2024 அன்று இடம்பெற்றது. இதன்போது கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பண்ணைகளை மீளமைக்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு துரிதமாக பண்ணை காணிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ் சுதாகரன் ,தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் உதவி பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






