WhatsApp Image 2024 07 29 at 11.57.40

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு World vision Lanka நிறுவனத்தினால் கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கதிரைகளை வழங்கி வைக்கும் நிகழ்வானது திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ரேகா நிருபனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வின் போது 59 ஆயிரம் பெறுமதிமிக்க 30 பிளாஸ்ரிக் கதிரைகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு world vision Lanka நிறுவனத்தின் பணிப்பாளர்  அ.ரவீந்திரனினால் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கதிரைகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்   கிறிஸ்தவர்களுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள வழிபாட்டு இடத்திற்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 07 29 at 11.57.40