
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 04.09.2024 அன்று காலை 8.30 மணி முதல் ஆரம்பமாகி தபால்மூல வாக்களிப்பு சுமூகமான நிலையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பானது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெற்று வருவதுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 290 உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 404 உத்தியோகத்தர்களும் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தபால் மூல வாக்களிப்பு செயற்பாட்டில் மாவட்ட செயலக மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்ட தனையும் அவதானிக்க முடிகின்றது.






