
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் முப்படைகளின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் 19.09.2024 அன்று இடம்பெற்றது. உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது முப்படைகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மால் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு விடையங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்ததுடன்இ அனர்த்தங்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்கள் தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்து அதிகாரிகளுக்கு இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிகழ்வில் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன்இ 243 படைப்பிரியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சத்திம குமாரசிறிஇ விமானப்படை உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






