
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 21.09.2024 அன்று நாடளாவிய ரீதியில் காலை எழு மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை இடம்பெற்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் 442 வாக்களிப்பு நிலையங்களில் 449686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்காளர்கள் தமது ஜனநாயக கடமையினை நிறைவேற்றுவதற்காக காலை ஏழு மணி முதல் ஆர்வத்துடன் வருகை தருவதை அவதானிக்க முடிந்தது.





