WhatsApp Image 2024 10 01 at 19.56.48

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில்  ஏற்பாடு செய்த சர்வதேச முதியோர் தினவிழா வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் 01.10.2024 அன்று இடம்பெற்றது. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்,   தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில், கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  அவர்கள் கலந்துகொண்டார்.

பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்  மற்றும் உலகளாவிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான வலுவான பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் முதியோர்களை கௌரவப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம் பெற்றது. இதன்போது  முதியோர்களினால் கிராமிய கூத்து அரங்கேற்றப்பட்டதுடன், சிறார்களினால் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பல இடம் பெற்றன. மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன்,  விசேட ஆற்றல்களை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில்  உதவி பிரதேச செயலாளர்  திருமதி நிருபா பிருந்தன், சிரேஸ்ட  விரிவுரையாளர் சமூகவியல் பிரிவு கிழக்கு பக்கலைக்கழகம் சி.சசிதரன், , நிருவாக உத்தியோகத்தர் திருமதி பி. யேசுதாசன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்,  ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 10 01 at 19.56.36 WhatsApp Image 2024 10 01 at 19.56.37 WhatsApp Image 2024 10 01 at 19.56.40 WhatsApp Image 2024 10 01 at 19.56.39

WhatsApp Image 2024 10 01 at 19.56.43 WhatsApp Image 2024 10 01 at 19.56.44 WhatsApp Image 2024 10 01 at 19.56.48 WhatsApp Image 2024 10 01 at 19.56.48 1

WhatsApp Image 2024 10 01 at 19.56.47 WhatsApp Image 2024 10 01 at 19.56.44 2 WhatsApp Image 2024 10 01 at 19.56.44 1