
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கல் தொடர்பான மீளாய்வு மற்றும் விரிவுபடுத்தும் செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.10.2024 அன்று இடம்பெற்றது.
உலக உணவு திட்ட நிறுவனம் அரசாங்கத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு உட்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான சமைத்த உணவுகளை வழங்குனர்களின் தரவுகளை சேகரித்தல் மற்றும் மீளாய்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இத்திட்டத்தினை ஏனைய வலயங்களிலும் வலுப்படுத்துவதற்கு வீட்டுத்தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உலக உணவு திட்ட அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.






