WhatsApp Image 2024 10 08 at 16.08.22

மட்டக்களப்பில் இலங்கை இராணுவத்தின் 75 வது வருட பூர்த்தியினையும்  சர்வதேச சுற்றுலா தினத்தையும் முன்னிட்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கல்லடி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான பெயர் பலகையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் 08.10.2024 அன்று திறந்து வைத்தார்.

அம்கோர் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் 243 படைப்பிரிவின்  பங்களிப்புடன் இப்பெயர்ப் பலகை நிர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரும்  வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிகளுக்கு  இப்பிரதேசத்தில் உள்ள இடங்களை இலகுவில்  அடையாளம் கண்டு கொள்வதற்கு இப் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் 243 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, கெனல் தம்மிக்க, அம்கோர் நிறுவன பணிப்பாளர் ப.முரளிதரன், மட்டக்களப்பு  மாவட்ட  சுற்றுலாத்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ. விவேகானந்தன் என பலர் கலந்து கொண்டனர். இலங்கை இராணத்தின் 243 படைப்பிரிவினர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நகரினை அழகுபடுத்துவதற்கும் பாரிய சேவை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2024 10 08 at 16.08.22 WhatsApp Image 2024 10 08 at 16.08.21 1 WhatsApp Image 2024 10 08 at 16.08.19 WhatsApp Image 2024 10 08 at 16.08.17