
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எஸ்.ஏ சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 15.10.2024 அன்று இடம்பெற்றது.
இதன் போது மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மேலும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந், மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள், கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம். மாஹிர், உதவி பிரதேச செயலாளர்கள்,கணக்காளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







