இலங்கை நிர்வாக சேவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினரால் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஒன்று கூடலில் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அவதூறான வார்த்தை பிரயோகங்கள் மூலமாக பரப்புரைகள் செய்து வந்தமைக்கு எதிராக கறுப்புபட்டி அணிந்து தங்களின் எதிர்ப்பினை காட்டும் நடவடிக்கையை 11.09.2019 புதன்கிழமை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர் அதனை எதிர்வரும் புதன்கிழமை (18.09.2019) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஊடக பிரிவுக்கு தெரிவித்தனர்.
தங்களின் தொழிற்சங்கம் நாடுபூராகவும் சுகயீன லீவுப்போராட்டத்தினை 10-11 ஆகிய தினங்களில் நடைபெறுகின்றமையால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.





