WhatsApp Image 2024 10 18 at 09.41.03மட்டக்களப்பில் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாண்டபத்தில் 18.10.2024 அன்று இடம்பெற்றது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் தொழில் வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான   திட்டத்தினை மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ்  இடம்பெற்றது.

சூரிய மின்கல படலம் (solar Panel) நிறுவுதல் மற்றும் பாரமரித்தல் தொடர்பான இரு நாள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் இப்பயிற்சி நெறியில் திறமையை வெளிக்காட்டும் நபர்களுக்கு NVQ தர சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. மேலும் எமது நாட்டில் அதிகளவான சூரிய மின் தகடுகள் நிறுவப்பட்டு வருவதனால் அதனை பராமரித்தல் மற்றும் பிந்திய சேவைகளை வழங்குவதற்கான நபர்கள் தேவை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2024 10 18 at 09.41.02 1 WhatsApp Image 2024 10 18 at 09.41.03 WhatsApp Image 2024 10 18 at 09.41.01 WhatsApp Image 2024 10 18 at 09.41.00 1

WhatsApp Image 2024 10 18 at 09.41.00 WhatsApp Image 2024 10 18 at 09.41.01 1 WhatsApp Image 2024 10 18 at 09.41.02