மட்டு நகரில் 65 மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்ட தனியார் பஸ் நிலையம் 12.09.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டாலி சம்பிக்க ரணவக்கவினால் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பெயரில் இந்த தனியார் பஸ்தரிப்பு நிலையம் சகல வசதிகளுடன் கூடியதாக இரண்டு மாடிகளைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கௌரவ அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தன் துறையில் குறிப்பிடும் போது, மட்டக்களப்பு விமான நிலையத்தை ஒரு கேந்திர நிலையமாக மாற்றினால் வேறு நாடுகளுக்கு நாம் சென்று உழைக்க வேண்டியதில்லை அது போன்று மட்டக்களப்பிற்கும் - திருகோணமலைக்கும் இடையில் பாரிய வீதிகளை அமைத்து மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் அத்தோடு அம்பாறை - மட்டக்களப்புக்கு வர்த்தக கேந்திர நிலையங்களை நிறுவி வர்தகத்தில் மேன்மை அடைய செய்யவேண்டும். அத்தோடு இன மத பேதங்களுக்கு அப்பால் செயற்படுகின்ற எனது அமைச்சு யாழ்பாணத்தில் மாநகர சபைக்கு கட்டிடம் வழங்கியது போன்று மட்டக்களப்புக்கும் அவசியம் உள்ளது. நிதி கிடைக்கும் போது அதனையும் செய்து தருவதாக கூறினார்.

பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமைச்சர் மற்றும் அதிகாரிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

தனியார் பேருந்து நிலையத்தினை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.ஞா.சிறிநேசன், மாநகர முதல்வர் திரு.தி.சரவணபவான், மாநகர சபை உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம், திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC 0735DSC 0769DSC 0770DSC 0771DSC 0797DSC 0786DSC 0792DSC 0822DSC 0810DSC 0835DSC 0715