WhatsApp Image 2024 11 19 at 13.39.19 1

பாசிக்குடா “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)”  வேலைத் திட்டம் தொடர்பான  முகாமைத்துவ கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் 19.11.2024 அன்று இடம்பெற்றது. பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையில்   மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்திற்காக கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய இரு கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி ஆசிபா பாசிக்குடாக் கடற்கரையை குறித்த “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)”  ஆக தரமுயர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தினார். “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” தரச் சான்றிதழ் டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள சுற்றாடல் கல்விக்கான மன்றம் (FEE) எனும் சர்வதேச நிறுவனத்தினால் சுற்றாடல் கல்வி மற்றும் தகவல், தரமான நீர், சுற்றாடல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் சேவை ஆகிய பிரதான நான்கு காரணிகளுடன் காணப்படும் கடற்கரைகளுக்கு வழங்கப்படுகின்றது.

இதற்காக பாசிக்குடாக் கடற்கரையில் தகவல் நிலையம் அமைத்தல், கடற்கரைப் பயனாளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல், கடற்கரை நீரின் தரம் தொடர்பாக டிஜிடல் அறிவித்தல் பலகை அமைத்தல், சுகாதார வசதிகள், கழிவகற்றல் சேவைகளை பராமரித்தலும் தரமானதாகப் பேணுதலும் மற்றும்  மீள்சுழற்சிக் கழிவுகளை சேகரித்தலும் அதனை ஒப்படைத்தலும்  போன்ற  செயற்பாடுள் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, கல்குடா பிரதேச சபை ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இதன் போது அரசாங்க அதிபர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும்  வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலை அதிகாரிகளுடன் மேற்கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று வாழைச்சேனை  பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம், மாவட்ட செயலக பிரதி  திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், மீப்பா நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய  உதவி முகாமையாளர்  ரீ.ஶ்ரீபதி, சுற்றுலாத்துறை அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகாநந்தராஜ், மற்றும் அரச திணைக்களங்கள் பலவற்றின் அதிகாரிகள் எனப் பலரும்  கலந்து கொண்டனர். இதன்போது நிகழ்நிலையினுடாக சுற்றுலாத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள்,  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மீப்பா  நிறுவத்தின் தலைமை காரியால அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 11 19 at 13.39.19 1 WhatsApp Image 2024 11 19 at 13.38.32 WhatsApp Image 2024 11 19 at 13.38.25 WhatsApp Image 2024 11 19 at 13.38.18