
தேசிய ரீதியில் அரச திணைக்களங்களுக்கு இடையில் நடாத்தப்படும் மாபெரும் வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்களது ஏற்பாட்டில் இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி திரிக் ஷி நாணயக்கார தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
தேசிய ரீதியில் உள்ள திணைக்கள உத்தியோகத்தர்களுக்கிடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடர்ச்சியாக 3 தினங்கள் இடம் பெறவுள்ள நிலையில் இச் சுற்றுப்போட்டியில் 27 அணிகள் தேசிய ரீதியில் பங்குபற்றுவதுடன், லீக் மற்றும் நொக்கவுட் முறையில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளது. இப்போட்டி தொடரானது நான்கு பிரிவுகளாக இடம்பெறவுள்ளதுடன், இதில் பெண்கள் மற்றும் ஆடவர்களும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
வெபர் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் முன்னால் செயலாளர் கே.மகேசன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வில் இலங்கை அரச சேவை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஶ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








