
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 25.11.2024 அன்று வழங்கப்பட்டது. பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையமானது பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காக கொண்டு பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
வடக்கு , கிழக்கு, மலையகப் பிரதேசங்களை சேர்ந்த விசேட தேவைக்குரிய மாணவர்களின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்துவதன் மூலம் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு வைத்தியர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக இச்சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாரி அறக்கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் ச.நிகேஷ், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி. ச கோணேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.






