
மட்டக்களப்பு மேற்கு கரடியனாறு கரடியன்குளம் ஆத்மகணானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வானது மடக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 18.12.2024 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான ஆத்மகணானந்தா வித்தியாலயலத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது நிட்ஸ் நிறுவன ஒருங்கமைப்பில் துரைஇராயி அறக்கட்டளை நிதி அனுசரனையில் இப்பிரதேச மக்களுக்கான பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் முன்பள்ளி சிறார்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் போதகர் கிருஸ்டோபர், மெதடிஸ்த திருச்சபையின் அருட்சகொதரி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், நிட்ஸ் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் இ. துஷ்யந்தன், ஆத்மகணானந்தா வித்தியாலய அதிபர் என்.சண்முகலிங்கம் , கிராம சேவகர் எஸ். கோபு மற்றும் பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.








