WhatsApp Image 2025 01 03 at 11.41.19

மட்டக்களப்பு மண்முனை போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள  திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபம் திறப்பு விழாவானது 03.01.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மண்டபத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு மண்முனை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப்பதாதை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்கள்,பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் ,மற்றும் முன்னாள் பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்பிள்ளை ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

WhatsApp Image 2025 01 03 at 11.41.17 WhatsApp Image 2025 01 03 at 11.41.19 1 WhatsApp Image 2025 01 03 at 11.41.20 WhatsApp Image 2025 01 03 at 11.41.19