WhatsApp Image 2025 01 21 at 15.50.13 1

புதிய அரசாங்கத்தினால்  நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து  நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு மூன்றாம் கட்டமாக  கீளின் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் பழைய  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.01.2025 அன்று இடம்பெற்றது.

நீடித்த சமூக கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கையர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. கிளீன்  ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல் அடிப்டை மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் வழங்கினார். மேலும் சுற்றுச்சூழல் சமூக மற்றும் நெறிமுறை முயற்சிகளின் நாடு தழுவிய முயற்சிகளை மீண்டும் நிலைநிறுத்துதற்கு  அனைவரும் செயற்பட வேண்டும். அழகான தீவு சிரிக்கும் மக்கள் எனும் கருப்பொருளை அடைவதற்கு  நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற் திட்டங்கள்  தொடர்பான தெளிவூட்டல்களை உதவி மாவட்ட செயலாளரினால் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

WhatsApp Image 2025 01 21 at 15.50.13 2 WhatsApp Image 2025 01 21 at 15.50.13 1 WhatsApp Image 2025 01 21 at 15.41.46 1 WhatsApp Image 2025 01 21 at 15.50.13

WhatsApp Image 2025 01 21 at 15.41.43 WhatsApp Image 2025 01 21 at 15.41.44 WhatsApp Image 2025 01 21 at 15.41.44 1 WhatsApp Image 2025 01 21 at 15.41.46