மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நன்னீர் மீனவர் சங்கத்தின் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இன்று கடந்த 26.09.2019 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பாவிப்பது சம்மந்தமான விரிவாக கலந்துரையாடப்பட்டது. அவ்வேளை மீனவர்கள் சட்டவிரோத மீன் பிடி வலைகளை உபயோகிப்பது நிச்சயமாக மீனவர்களாகவே இதனை தடை செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும், நெத்தலி வலை பாவிக்கப்பட கூடாது என்றும் மீன்பிடி திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ள எவ்விதமான வலைகளும் பாவிக்கப்பட கூடாது என்று உறுதியாக தீர்மானிக்கப்ட்டது.
மேலும் இக்கூட்டத்தில் நன்னீர் மீனவர் குறித்து கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் குறைகள் ஆராயப்பட்டது. இதில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள், மீன்பிடி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர், கடற்படை, உயர் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.











