WhatsApp Image 2025 02 24 at 16.11.07

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  அவர்கள் வழங்கிவைத்தார். மட்டக்களப்பு  மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவில் கடமை புரியும் உத்தியோகத்தருக்கு இந்நிதி வழங்கி வைக்கப்பட்டது. சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதி உதவி கோரிக்கை முன்வைக்கப்பட்டதனை முன்னிட்டு  முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரனின் ஏற்பாட்டில் நண்பர்களின் நிதிப் பங்களிப்பில் இவ் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் போது உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் மற்றும் நிர்வாக  உத்தியோகத்தர் கே. மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 02 24 at 16.11.07 WhatsApp Image 2025 02 24 at 16.12.52